Main Menu

கும்புறுமூலை விபத்தில் 21 வயது இளைஞன் பலி : மற்றொருவர் படுகாயங்களுடன் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதி

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்
கல்குடாப்பொலிஸ் பிரிவிலுள்ள கும்புறுமூலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மற்றொருவர் படுகாயமுற்ற நிலையில், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்குடாப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சந்தன விதானகே தெரிவித்தார்.

கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த அருமைத்துரை கிருஷாந் (வயது-21) என்ற இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், கறுவாக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை சிவநேசராஜா (வயது – 48) என்பவரே காயமடைந்தவராவார்.

கும்புறுமூலை- பாசிக்குடா வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஒன்றன் பின் ஒன்றாகச்சென்ற மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியுமே மோதுண்டு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed