Main Menu

மஜ்மா நகர் கிராம அபிவிருத்திச்சங்க பொதுக்கூட்டமும் புதிய நிருவாகத்தெரிவும்

இந்த செய்தியைப் பகிர்க >>>

மஜ்மா நகர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிருவாகத்தெரிவும் அல்-மஜ்மா நகர் மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் நேற்று (25) பிற்பகல் 3 மணிக்கு முன்னாள் தலைவர் AL.சமீம் தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்திற்கு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.தரணிதரன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சுபைர், கிராம சேவையாளர் எம்.அஸ்வர் மற்றும் 120ற்கு மேற்பட்ட அங்கத்தவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

செயலாளராக TUM. அபூபக்கர் தெரிவு செய்யப்பட்டதுடன், தலைவராக இரண்டாவது முறையாகவும் அங்கத்தவர்களின் அமோக ஆதரவுடன் AL.சமீம் தெரிவு செய்யப்பட்டார்.

பொருளாளர் MI.அமீர், உபதலைவர் UM. புஹாரி ஹாஜியார், உபசெயலாளர் MS.ஆதம்பாவா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டார்.

1. MM.ரபீக்
2. AH.பலீல்
3. K. முபாரக்
4. ASM. நௌபர்
5. RM. இப்ராஹிம்
6. HM. அஹமட் லெப்பை
7. NM. காதர்
8. MHA. வாஹிட் ஆகியோர் உறுப்பினர்களாகவும், கணக்குப் பரிசோதகராக எம்.இல்யாஸ் மௌலவியும் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed