Main Menu

கல்குடா ஜனாஸா நலன் மற்றும் சமூக சேவை அமைப்பின் முதலாம் கட்ட சிரமதானப்பணி

இந்த செய்தியைப் பகிர்க >>>

கல்குடா ஜனாஸா நலன் மற்றும் சமூக சேவை அமைப்பின் முதலாம் கட்ட சிரமதானப்பணி ஓட்டமாவடி முகைதீன் ஜுமஆப் பள்ளிவாயல் மையவாடியில் நேற்று (26) சனிக்கிழமை காலை முதல் இடம்பெற்றது.

இச்சிரமதானப் பணியில் வைத்தியர்கள், பிரதேச செயலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், உலமாக்கள், ஆசிரியர்கள், Occ99 நண்பர்கள் வட்ட உறுப்பினர்கள், முதியோர்கள், இளைஞர்கள், பள்ளிவாயல் நிருவாகிகள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த சிரமதான நிகழ்விற்கு வாகன உதவி, நிதியுதவி வழங்கியோருக்கும் மற்றும் நேரடியாகக் கலந்து கொண்ட அனைத்து தரப்பினருக்கும் கல்குடா ஜனாஸா நலன் மற்றும் சமூக சேவை அமைப்பு மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், இரண்டாம் கட்ட சிரமதானப்பணி மிக விரைவில் இடம்பெறுமென தெரிவிக்கப்படுகின்றது.

கல்குடா ஜனாஸா நலன் மற்றும் சமூக சேவை அமைப்பு பிரதேசத்தில் பல்வேறு ஜனாஷாசார் பணிகளுடன் மட்டுப்படுத்தப்படாமல் பல்வேறு சமூக சேவைப் பணிகளிலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

எம்.ஐ.லெப்பைத்தம்பி (Thehotline)

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed