Main Menu

பதுரியா – மாஞ்சோலை இளைஞர்களின் ஒத்துழைப்பில் சுத்தமான குடிநீர் வசதி

இந்த செய்தியைப் பகிர்க >>>
றிபாஸ் அபூபக்கர்
பதுரியா – மாஞ்சோலை இளைஞர்களின் ஒத்துழைப்புடன் மாஞ்சோலை பொலிஸ் போஸ்ட் வீதியில் வசிக்கும் பொது மக்கள் இது காலவரை எதிர்நோக்கி வந்த சுத்தமான குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
 
குறித்த வீதியில் வசிக்கும் மக்களின் நன்மைகருதி குடிநீருக்கான குழாய் பாதிக்கும் வேலைத்திட்டம் நேற்று (2020/09/25) முன்னெடுக்கப்பட்டது.
 
இதற்கான நிதியினை மாஞ்சோலை சனசமூக நிலையம் வழங்கியதுடன், குழாய் பாதிக்கும் பணிகளுக்கான கனரக வாகன உதவியை கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை வழங்கியிருந்ததமை குறிப்பிடத்தக்கது.
 
பிரதேச இளைஞர்களின் முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலைத்திட்டத்தை கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் ஆரம்பித்து வைத்தார்.
 
பிரதேச மக்களினதும் பிரதேச இளைஞர்களினதும் கோரிக்கையினையேற்று துரிதமாக வேலைத்திட்டத்தை ஆரம்பித்த நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கும், ஓட்டமாவடி பிராந்திய நிலையப் பொறுப்பதிகாரி திரு.மாறவன் மற்றும் ஊழியர்களுக்கும், ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஏ.எம்.நௌபர் ஆகியோருக்கும் பிரதேச மக்கள், சனசமூக நிலையத்தின் நிருவாகத்தினர் நன்றிகளைத் தெரிவிக்கின்றனர்.
 
இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed