Main Menu

அகரம் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இலவசக்கருத்தரங்கு

இந்த செய்தியைப் பகிர்க >>>

செம்மண்ணோடையில் சேவை நோக்கில் இயங்கி வரும் அகரம் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் அரச போட்டிப்பரீட்சை எழுதவுள்ளவர்களுக்கான இலவசக்கருத்தரங்கு கடந்த 26.09.2020ம் திகதி சனிக்கிழமை காலை 08.30 மணி முதல் மாலை 04.30 மணி வரை நடைபெற்றது.

இதில் உள்ளூர் வளவாளராக பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஏ.ஜெ.எம்.மர்சூக் (SLEAS) மற்றும் வெளியூர் வளவாளராக கிழக்கு மாகாண சபையின் பதில் செயலாளர் ஏ.ஜி.எம்.பஸால் (SLAS) ஆகியோர் கலந்து கொண்டதோடு, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இந்நிகழ்வை நடாத்த உதவிய கல்வி நிலையத்தின் பணிப்பாளரும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர், அனுசரணை வழங்கிய ZEEMAS வர்த்தக நிலைய உரிமையாளர்
எஸ்.எம்.பாரிஸ் ஆகியோருக்கும் EESA MOTORS உரிமையாளர் ஈ.எல்.றியாஸ் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.

தகவல்
எம்.வை.பயாஸ்
செயலாளர்
அகரம் கல்வி நிலையம்

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed