Main Menu

வாழைச்சேனை சக்சஸ் எகடமியின் சிறுவர் தினக் கொண்டாட்டம்

இந்த செய்தியைப் பகிர்க >>>

வாழைச்சேனை சக்சஸ் எகடமி முன்பள்ளிப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் தினக் கொண்டாட்டம் கல்வியமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய நேற்று (02.10.2020) எகடமியில் இடம்பெற்றது.

முன்பள்ளி அதிபர் திருமதி எலிஷாவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினர்களாக மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் துஜிபா எம்.அன்வர், பொறியியல் மாணவர் வை.எல்.பயாஸ், மருத்துவ மாணவர் எஸ்.எம்.இம்ரான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இவ்வருட சிறுவர் தினத்தின் தொனிப்பொருள் “எங்கள் நாடு, எங்கள் கைகளில்“ என்பதாகும்.

இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து நாட்டினை மீளக்கட்டியொழுப்ப சிறுவர்களாகிய எமது வகிபங்கு பற்றிய விழிப்புணர்வு உரையும் இடம்பெற்றது. எழுக தாய் நாடு எனும் காட்சிப்பதாதையொன்றும் மாணவர்களால் உருவாக்கப்பட்டது.

சிறுவர்களை மகிழ்விக்கும் வகையில் கேக் வெட்டப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டது. எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி மாணவர்களுக்கு அதிபர் திருமதி எலிஷா, ஆசிரியைகளான திருமதி நஸ்மிலா அஸ்வர், செல்வி எம்.பி.பிர்தௌஸியா ஆகியோரின் நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட பரிசில் பொதியும் இதன் போது மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

முஹம்மது றிழா

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed