Main Menu

ஓட்டமாவடி சிறாஜ் எக்சலன்ட் கல்லூரியினால் தரம் ஐந்து மாணவர்களுக்கு முழு நாள் செயலமர்வு

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்
ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப்பிரிவில் கல்வியை அபிவிருத்தி செய்வதற்காக சிறாஜ் எக்சலன்ட் கல்லூரி பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

அதனடிப்படையில், 2020ம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான முழு நாள் செயலமர்வு சிராஜ் எக்சலன்ட் கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது, வளவாளராக மட்டக்களப்பு, வேப்பவட்டுவான் அரசினர் தழிழ் கலவன் பாடசாலையின் ஆசிரியர் எஸ்.மோகன் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில், சிறாஜ் எக்சலன்ட் கல்லூரியின் பணிப்பாளர் எம்.எம்.நவாஸ் ஆசிரியர், கல்லூரியின் திட்ட முகாமையாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.ஏ.ரஹீஸ், சிறாஜிய்யா அரபுக்கல்லூரியின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஎல்.கபீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed