Main Menu

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு “SLIT LAMP” நவீன கண் பரிசோதனை உபகரணம் அன்பளிப்பு

இந்த செய்தியைப் பகிர்க >>>

-ஐ.எல்.எம் நாஸிம்-
சம்மாந்துறை லயன்ஸ் கழகத்தினால் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கண் பரிசோதனை செய்யும் நவீன “SLIT LAMP” உபகரணமும் முதியோர்களின் பாவணைக்காக 40 துடைக்கும் துணித்துண்டுகளும் நேற்று (05) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.எச்.எம்.ஆஸாத் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன், லயன்ஸ் கழகத்தின் பிராந்தியத் தவிசாளர் திணுஷ பரணமான, லயன் கழகத்தலைவர் சட்டத்தரணி எம்.பி.எம்.பௌஸான், லயன் கழக வலையத்தலைவர் எம்.ஐ.எம்.சியாத், வைத்தியர் எம்.சி.எம்.மாஹிர், கண் வைத்திய நிபுணர் அமில மற்றும் நிதியுதவி வழங்கிய ஊர்ப்பிரமுகர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed