Main Menu

தியாவட்டவான் பிரதேச குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் ஆசிரியர் : குடிநீர்த்தங்கி வழங்கல்

இந்த செய்தியைப் பகிர்க >>>

நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ள தியாவட்டவான் பிரதேசத்தின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் நோக்கில் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் தியாவட்டவான் வட்டார உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் ஆசிரியர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதன் தொடரில், பிரதேச சபை உறுப்பினர் விடுத்த வேண்டுகோளின் பேரில் கத்தாரில் தொழில் புரியும் மீராவோடையைச் சேர்ந்த சகோதரர் வை,சுஹைல் அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட குடிநீர்த்தங்கி தியாவட்டவான் பிரதேசத்தின் பாலைநகர் கிராமத்திலுள்ள மிகவும் தேவையுள்ள குடும்பத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.

இதனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் ஆசிரியர் குறித்த குடும்பத்தினரிடம் கையளித்தார்.

இதன் மூலம் குறித்த குடும்பத்தின் குடிநீருக்கான தேவை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், இவ்வாறு அவசியத் தேவையுள்ள ஏனைய குடும்பங்களுக்கும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்ததுடன், ஏனைய சகோதரர்களும் இவ்வாறான உதவிகளைச் செய்ய முன் வந்தால் பெரும் நன்மையளிக்குமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு, உதவும் நோக்கமுள்ளோர் தன்னைத் தொடர்பு கொண்டால் பூரண ஒத்துழைப்புக்ளை வழங்கி உதவத் தயாராக இருப்பதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed