Main Menu

கத்தார் “Eastern Lions” ஓட்டமாவடி பைறூஸின் சத்திர சிகிச்சைக்கு இரண்டு இலட்சம் நிதியுதவி

இந்த செய்தியைப் பகிர்க >>>

இரு சிறுநீரகங்களும் செயலிழந்து அவசர சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலையிலுள்ள செம்மண்ணோடை முஸ்தபா லெப்பை பைறூஸின் சிகிச்சைக்கு கத்தாரில் இயங்கும் “Eastern Lions Cricket Club” நிதியுதவியளித்துள்ளது.

சகோதரர் பைறூஸின் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு பெருந்தொகைப்பணம் தேவைப்படுகின்ற நிலையில், சாதாரண குடும்பத்தைச்சேர்ந்த அவரால் இப்பாரிய தொகையினை திரட்ட முடியாத துர்ப்பாக்கிய நிலையினைக் கருத்திற்கொண்டு Eastern Lions விளையாட்டுக்கழகமும் பங்குதாரராக மாறி நிதி சேகரிப்பை முன்னெடுத்திருந்தது.

கழகத்தின் முகாமையாளர் ஜமால்தீன் முஹம்மது பௌஸர் தலைமையில் கடந்த ஒரு வார காலமாக நிதி திரட்டல் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அதற்கமைய திரட்டப்பட்ட சுமார் 220,090 ரூபாய் நிதி நேற்று 10.10.2020ம் திகதி சனிக்கிழமை முகாமையாளருடைய புதல்வர் அஹ்னான் ஹம்தியினால் சகோதரர் பைறூஸின் புதல்வியிடம் கையளிக்கப்பட்டது.

இவ்வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய கழகத்தினுடைய உறுப்பினர்களுக்கும் ஏனைய தனவந்தர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் Eastern Lions கழகம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், ஏனைய அமைப்புக்கள், சகோதரர்களும் உதவ முன்வருமாறு கேட்டுக் கொள்கின்றனர்.

தகவல் :
பாறூக் றியாஸ் & முஹம்மது மஹ்றூப் (கத்தார்)

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed