Main Menu

ஓட்டமாவடி பைறூஸின் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு கத்தார் வாழ் கல்குடா சகோதரர்களின் ஒன்றியம் முதற்கட்டமாக மூன்று இலட்சம் நிதியுதவி

இந்த செய்தியைப் பகிர்க >>>

சிறுநீரகப் பாதிப்புக்குள்ளாகியுள்ள சகோதரர் முஸ்தபா லெப்பை பைறூஸின் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு உதவும் நோக்கில் கத்தார் வாழ் கல்குடா சகோதரர்களின் ஒன்றியம் கத்தார் வாழ் கல்குடா பிரதேச சகோதரர்களுடன் ஒன்றிணைந்து முதற்கட்டமாக சேகரித்த சுமார் 313,308 ரூபாய் நிதி சகோதரரின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கத்தார் வாழ் கல்குடா சகோதரர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளதாவது,

குறுகிய கால இடைவெளியில் விடுக்கப்பட்ட அவசர வேண்டுகோளையேற்று சிரமம் பாராது நிதியுதவிகளை வழங்கிய சகோதரர்களுக்கும் குறித்த சகோதரனுக்கு உதவும் பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ள அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இத்தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வைத்தியர்களின் ஆலோசனைக்கமைவாக அவரின் ஆரோக்கியம் கருதி மிக மிக அவசரமாக சத்திர சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியுள்ளதனால், கத்தாரிலுள்ள சகோதரர்கள் குறிப்பாக, கல்குடா பிரதேச சகோதரர்களின் ஒத்துழைப்புக்களை கத்தார் வாழ் கல்குடா சகோதரர்களின் ஒன்றியம் குறுகிய காலப்பகுதியில் கோரியிருந்தது.

விடுக்கப்பட்ட அவசரக்கோரிக்கையினை ஏற்று கத்தாரிலுள்ள கல்குடா பிரதேச சகோதரர்கள் தம்மால் முடிந்த நிதிப்பங்களிப்பினை வழங்கியதன் பேரில், ஏற்கனவே வாக்களித்தபடி கடந்த 10.10.2020ம் மேற்குறித்த தொகைப்பணம் சகோதரர் பைறூஸின் கணக்கில் வைப்பிலிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (சிட்டை இணைக்கப்பட்டுள்ளது)

சகோதரரின் சிகிச்சைக்காக சுமார் 32 இலட்சம் தேவைப்பாடாகவுள்ள நிலையில், எம்மால் வழங்கப்பட்ட தொகை அதன் ஒரு பகுதியே என்பதுடன், கத்தாரிலுள்ள கல்குடா பிரதேச சகோதரர்கள் தங்களால் முடிந்த உதவிகளை வழங்குவதோடு, முடியுமான சகோதரர்கள் இந்தப்பணியில் இணைந்து செயற்பட முன்வருமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன், கீழே பதிவிடப்பட்டுள்ள ஆவணத்தினைப் பிரதியெடுத்து உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் காண்பித்து உதவித்தொகையினைப் பெற்றும் உதவிடவும் முடியும்.

மேலும், சத்திர சிகிச்சை அவரசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய சூழல்நிலையில், இரண்டாம் கட்ட நிதி சேகரிப்பினை நாம் மேற்கொண்டுள்ளோம். அதனையும் மிக விரைவில் சேகரித்து குறித்த தினங்களுக்கு முன்னர் தாமதிக்காமல் வழங்கி உதவியினால் பெரும் நன்மையாக இருக்குமென்பதுடன், இந்தத்தருணத்தில் எமது சகோதரர்களின் பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றோம்.

உதவிகளை வழங்க விரும்புவோர் கீழுள்ள சகோதரர்களைத்தொடர்பு கொண்டு உதவிகளை வழங்க முடியும் என்பதுடன், தனிப்பட்ட ரீதியில் வழங்க விரும்பினால் அவரது கீழுள்ள கணக்கிலக்கத்திற்கு அனுப்பி உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம் எனத் தெரிவித்துள்ளனர்.

சகோதரர் றஸ்வி – 50668687
சகோதரர் இஸ்ஸத் – 66031219
மௌலவி பௌஷர் – 74496536
சகோதரர் ஜெஸ்மின் – 33705373
சகோதரர் இர்சாத் -77716971
சகோதரர் மஹ்ரூப் – 77832283

கணக்கிலக்கம்

M. L . FAIROOS
AC No : 340200150008519
People’s Bank
Oddamavadi.

கத்தார் வாழ் கல்குடா சகோதரர்களின் ஒன்றியம்

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed