Main Menu

கல்முனையில் டெங்கை ஒழிக்க தீவிர நடவடிக்கை

இந்த செய்தியைப் பகிர்க >>>

(சர்ஜுன் லாபீர்)
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று (17) பராமரிப்பற்ற வெற்றுக்காணிகள் மற்றும் பூட்டப்பட்டுக் கிடைக்கின்ற இடங்களைக் குறி வைத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

கல்முனை சுகாதாரப் பிரிவினரும், கல்முனை பொலிஸ் நிலையமும் இணைந்து கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் றிஸ்னியின் தலைமையில் விசேட டெங்கொழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அனேகமான வெற்றிக்காணி சொந்தக்காரர்களுக்கு முன்னெச்சரிக்கையும் சிலருக்கெதிராக வழக்குத்தாக்கலும் செய்யப்பட்டுள்ளது.

மாரி காலம் தொடங்கியுள்ளதால் இனிவருங்காலங்களிலும் தீவிரமான டெங்கு நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, பொது மக்கள் அனைவரும் தத்தமது இடங்களை டெங்கு நுளம்புகள் பெருகா வண்ணம் சுத்தமாக வைத்திருப்பது தங்கள் மீது திணிக்கப்பட்ட கட்டாயக்கடமையாகும்.

மீறுவோருக்கெதிராக பக்கச்சார்பின்றி உடனடியாக வழக்குத்தாக்கல் செய்யப்படுமென்பதை மக்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன் என கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஐ.றிஸ்னி தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed