Main Menu

திலக் எம்.பியின் வேண்டுகோளில் மக்களுக்கு மூலிகை பொதிகள் வழங்க Dr. நபீல் நடவடிக்கை.

இந்த செய்தியைப் பகிர்க >>>

(எஸ்.அஷ்ரப்கான் – கல்முனை)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி திலக் ராஜபக்ஸவின் வேண்டுகோளையேற்று பொது மக்களுக்கு வழங்குவதற்காக கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்புத் தரவல்ல ஆயுர்வேத பானத்துக்கான மூலிகைப்பொதிகள் கிழக்கு மாகாண ஆயுர்வேதத் திணைக்களத்தின் கல்முனைப் பிராந்திய அலுவலகத்தால் ஒதுக்கீடு செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இவற்றை திணைக்களத்தின் கல்முனைப் பிராந்தியத்துக்கான இணைப்பாளரும், நிநந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சருமான வைத்திய கலாநிதி எம்.ஏ.நபீல் பாராளுமன்ற உறுப்பினரின் அம்பாறை அலுவலகத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை காலை சம்பிரதாயபூர்வமாக கையளிக்க பாராளுமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட செயலாளர் ஷரித் விதானகே பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பதிகாரி லக்‌ஷன் டி சில்வா, தேசத்தை காக்கும் இளைஞரணியின் கிழக்கு மாகாணத்தலைவர் முஹமட் முஸ்தபா முஹமட் நிசாம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகரவின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான கிழக்கு மாகாண இணைப்பாளரும், அரசியல், சமூக, பொதுநல, ஊடகச்செயற்பாட்டாளருமான றிசாத் ஏ.காதர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இவற்றில் கணிசமான பகுதியை வருகின்ற நாட்களில் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் உறவுகளுக்கு வழங்கி வைக்குமாறு தேசத்தைக்காக்கும் இளைஞரணிக்கு திலக் ராஜபக்ஸ எம்பி அறிவுறுத்தியுள்ளார்.

அதே போல, அடுத்த மாத நடுப்பகுதியில் திலக் ராஜபக்ஸ எம்பியால் அம்பாறையில் இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் இரத்ததான வைபவம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதன் போதும் பொது மக்களுக்கு இம்மூலிகைப் பொதிகளை வழங்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed