Main Menu

அரச புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரசியத் தகவலில் கிரான் பிரதேசத்தில் பெருந்தொகை துப்பாக்கி ரவைகள் மீட்பு

இந்த செய்தியைப் பகிர்க >>>

கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தொப்பிகல பிரதேசத்திற்குட்பட்ட கோராவளி காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பெருந்தொகை துப்பாக்கி ரவைகள் நேற்று 29.11.2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

அரச புலனாய்வுத்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலையைப்பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுனவின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இப்பொருந்தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளது.

இதில்,
ரீ 56 ரக துப்பாக்கி ரவைகள் 250,
Five Zero ரக துப்பாக்கி ரவைகள் 37,
வீ.பீ. எல்.எம்.ஜீ துப்பாக்கி ரவைகள் 500, Vetenetor துப்பாக்கி ரவைகள் 4,
ரீ 56 துப்பாக்கி ரவைக்கூடுகள் (மகஸீன்) 2, சிக்கனல் பரா லைட் 1 ஆகிய உள்ளடங்குகின்றன.

விடுதலைப்புலிகளின் மாவீரர் தினத்தையொட்டி அரச புலனாய்வுத்துறையினரும் இராணுவத்தினரும் தேடுதல் நடத்தலாம் என்ற என்ற அச்சத்தின் காரணமாக மீட்கப்பட்ட ரவைகள் அனைத்தும் ஓரிரு தினங்களுக்கு முன்னர் காட்டுப்பகுதியில் மறைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், மேலும் ஆயுதங்கள் இப்பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தன் பேரின் அரச புலனாய்வுத்துறையினரும் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed