Main Menu

30.11.2020ல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில்

இந்த செய்தியைப் பகிர்க >>>
கடந்த 30.11.2020 அன்று எமது செய்திப் பக்கத்தில் கொரோனா வைரஸ் தொடர்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கல்முனைப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் ஜி.சுகுணனிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்றிற்கு அவர் வழங்கிய பதில் தொடர்பில் எம்மால் வெளியிடப்பட்ட நீதிமன்றம் சம்பந்தப்பட்ட செய்தியானது, மொழி மயக்கம் காரணமாக, பிறழ்வாக இச்செய்தியானது, எவ்வித தீய நோக்கத்துடனும் எண்ணமுமற்ற நிலையில் என்னால் அனுப்பப்பட்டது என்பதும், நீதிமன்றத்தை செயற்பாட்டை, நீதி நிர்வாகத்தை கேள்விக்குட்படுத்துகின்ற எந்தநிலைப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை என்பதையும் வைத்திய கலாநிதி ஜி.சுகுணனினால் அளிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்பிலான கேள்விக்கான பதிலானது, நீதிமன்றச் செயற்பாடு வழமை போன்று முன்னெடுக்கும் பட்சத்தில் எத்தனை பேருக்கு சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்ற செய்தியுடன் நீதிமன்றச் செயற்பாடுகள் காரணமாக காலதாமதமாகின்றது என்ற வாசகம் பிழையாக இணைந்து பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பிரசுரிக்கப்பட்ட செய்தியிலிருந்து மேற்குறித்த வாசகத்தை அகற்றுவதுடன், சீரான நிலையில் நீதிமன்றம் இயங்குகின்ற பட்சத்தில் சட்டநடவடிக்கை எடுப்பேன் என்ற அவருடைய பதிலடிப்படையிலேயே அச்செய்தி பிரசுரிக்கப்பட்டது.
தற்போது நீதிமன்ற செயற்பாடு கால தாமதமாகின்றது என்ற வாசகம் தொடர்பில் விமர்சனம் எழுவதால் வாசகத்தை அகற்றுவதுடன், உரிய தரப்பிடம் இவ்விடயம் தொடர்பில் மன்னிப்புக் கோருகின்றோம்.
நிர்வாகம்
இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed