அசெளகரியங்களுக்கு வருந்துகிறோம்.
கடந்த 30.11.2020ம் திகதி எமது இணையத்தில் வெளிவந்த தங்களின் செய்தி தொடர்பில்
கடந்த 30.11.2020ம் திகதி இடம்பெற்ற தங்களின் ஊடக சந்திப்பில் தாங்கள் தெரிவித்த கருத்துக்கு மாற்றமான முறையில் எம்மால் தவறுதலாக செய்தி பதிவிடப்பட்டதுடன், அதனால் தங்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட மற்றும் அலுவலக ரீதியாக ஏற்பட்ட அசெளகரியங்களுக்கும் எம்மால் ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறோம்.
கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் பணியில் சுகாதாரத்துறையினரும் குறிப்பாக கல்முனைப் பிராந்தியத்தில் தாங்களும் மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்புடனான பணியினை நாம் நன்கறிவோம்.
இந்த இக்கட்டான சூழலில் தாங்கள் பணியாற்றி வருகின்ற நிலையில் தங்களது தனிப்பட்ட நலன்கள் மற்றும் அலுவலக ரீதியான செயற்பாட்டுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்தவோ நன்மதிப்பை இல்லாமல் செய்யும் நோக்கிலோ அவ்வாறு பதிவிடப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இனி மேலும் இவ்வாறான தவறுகள் இடம்பெறா வண்ணம் அவதானத்துடன் நடந்து கொள்வதுடன், ஏற்பட்ட தவறுக்கு ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இப்பணியில் தேக ஆரோக்கியத்துடனும் பாதுகாப்புடன் செயற்பட எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டிக் கொள்கிறோம்.
நன்றி.
எம்.ஐ.லெப்பைத்தம்பி
பணிப்பாளர்
Thehotlinelk
Comments are Closed