Main Menu

முன்னைய அரசாங்கம் அபிவிருத்திக்கு பதிலாக பழிவாங்கலையே செய்தது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த

இந்த செய்தியைப் பகிர்க >>>

முனீறா அபூபக்கர் & எம்.ரீ.ஹைதர் அலி

முன்னைய அரசாங்கம் வேலைக்குப்பதிலாக பழிவாங்கலை மட்டுமே செய்தது. தற்போதைய அரசாங்கம் பழிவாங்கலுக்குப் பதிலாக வேலை செய்வதற்கு முன்னுரிமையளித்துள்ளதாக கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டடப்பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் அன்று எதிர்க்கட்சியிலிருந்த போது, நல்லாட்சி அரசாங்கத்திற்கெதிராகப் பல கோஷங்கள் எழுந்தன. இன்று எதிர்க்கட்சிக்கு இது போன்ற எந்தக்கோஷங்களும் இல்லை.

உண்மையில் மக்களுக்காகச் செயற்படும் ஒரு அரசாங்கம் இன்றுள்ளது. “அரசாங்கம் தோல்வி” என்பதைக் காட்ட சில முயற்சிகள் இருந்த போதிலும், அரசாங்கம் வெற்றியானதாகவேயுள்ளது என்பதை மக்கள் அறிவார்கள்.

“உங்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்” வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் திவூலப்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவின் கெஹெல்அல்ல தெற்கு, பொல்வத்த மற்றும் மடிதியவல கீழ் ஆகிய பிரதேசங்களில் கட்டப்பட்ட 3 புதிய வீடுகளை பொது மக்களுக்கு கையளிக்கும் வைபவத்தில் நேற்று (20) கலந்து கொண்டு மேற்கண்டவாறு உரையாற்றினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடகத்தின் படி இவ்விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டடப்பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் “உங்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்” வீடமைப்புத்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வேலைத்திட்டம் நாட்டின் 14,022 கிராம சேவையாளர் பிரிவுகளில் செயற்படுத்தப்படுகிறது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed