Main Menu

“காலம் செய்த கோலம்” தொடர் 4 -றிஹானா றஸீம்

இந்த செய்தியைப் பகிர்க >>>

“காலம் செய்த கோலம்” தொடர் 4 -றிஹானா றஸீம்

ஸான் தரையில் கிடந்ததைப்பார்த்த தாய் ஸாறா ஓடி வந்து “மகன் மகன்” என்று தலையை வருடினாள்.

தாயைக் கண்டதும் அவசரமாக கண்ணீரைத்துடைத்து விட்டு,
“என்னம்மா…”
“இல்ல கண்ணா உனக்கு ரொம்ப பசியா இருக்கும். கஞ்சி காச்சிருக்கன் வந்து குடி “

“சரிம்மா நீங்க எடுத்து வைங்க நான் இஷா தொழுதுட்டு வாரன்” என்று அறைக்குள் நுழைந்தான்.

ஸானும் தொழுகையை முடித்து விட்டு வர அன்வரும் சரியான நேரத்தில் வந்தான்.

“என்னங்க நீங்களும் புள்ளையோட கஞ்சி குடிக்க வாங்க”.

சரி, மகனும் வாப்பாவும் பாயிலிருந்து கஞ்சைக் குடித்தார்கள்.

“வாப்பா நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே எனக்கு வகுப்பு எதுவுமில்லை. அதனால ப்ரெண்ட்ஸ் எல்லாம் ட்ரிப் போறாங்க. நானும் அவங்களோட போய் வரட்டுமா” என்று ஒரு தயக்கமும் படபடப்புமான குரலில் கேட்டான் ஸான்.

எதையும் யோசிக்காமல் மகனில் இருந்த நம்பிக்கையில் அன்வரும் போவதற்கு அனுமதி வழங்கினார். ஆனால், ஸாறா எதுவுமே சொல்லாமல் மெளனமாக இருந்தாள்.

ஸான் உம்மாவை கவனித்தவனாக “உம்மா நான் ப்ரெண்ஸ் கூட வெளிய போறது விருப்பமில்லையா …? ஏன் உம்மா எதுவும் சொல்லாம இருக்கிறீங்க” என்று தாயைப்பார்த்து கேட்டான்.

“அது வந்து மகன் கட்டாயம் போகனுமா…?”

“ஏன் உம்மா ” உங்களுக்கு விருப்பமில்லேன்னா நான் போகல்ல என்று சொல்லும் போதே, அன்வர் ஸாறாவைப்பார்த்து,
“என்ன ஸாறா பாவம் தானே மகன் ப்ரெண்ட்ஸ் கூட போகட்டும். எப்பவும் படிப்பும் வகுப்பும் தானே. அதனால கொஞ்சம் ஓய்வெடுக்கட்டுமே…” என்று மறுமுனையில் அன்வர் கூறி ஒன்றும் பேசாமல் மெளனமாக சம்மதத்தை வெளிப்படுத்தினாள்.

“மகன் நீங்க நித்திரை கொள்ளுங்க. நான் உங்கள நேரத்தோட எழுப்புறன்”

தலையை ஆட்டிக்கொண்டு ஸான் தூங்குவதற்கு விரிப்பை விரித்து தலைசாய்ந்து கொண்டான்.

பள்ளியில் அதான் கேட்கும் சத்தம் கேட்டதுமே உடனே எழும்பி சுபஹ் தொழுது விட்டு, மகன் ஸானையும், தன் கணவரையும் எழுப்பி தொழச்சொல்லி விட்டு தேநீர் ஊற்றுவதற்கு சமையலறைக்குள் சென்றாள். ஸாறா தேநீர் ஊற்றிக் கொண்டிருக்கும் போது “மகன் வெளிய போறன்டு சொல்லும் போதே மனசுக்கு ஒரு படபடப்பா இருக்கு. என்னமோ தெரியலை அல்லாஹ் தான் இருக்கான். கவனமாக போய் வரட்டும்” என தனக்குள்ளே சொல்லிக் கொண்டு தேநீரை இருவருக்கும் கொடுத்து விட்டு அவளும் அருந்திக் கொண்டு மகனை வழியனுப்ப ஸாறாவும் தனது கணவரும் வாசலில் நின்று வழியனுப்பினார்கள்.

ஸாறா தன் கணவரைப்பார்த்து “என்னங்க மகன் வீட்ட விட்டு வெளிய போறன்டு சொல்லும் போதே மனசுக்கு ஒரு மாதிரியா இருக்கு”.

அன்வர் புன்னகைத்துக்கொண்டு ஸாறாவின் தோலைப்பிடித்து “அப்படியெல்லாம் ஒன்றுமில்ல ஸாறா .

நீ ஒரு நாளும் ஸான பிரிந்து இருந்ததில்லையே, அதான் உனக்கு இப்படியெல்லாம் நினைக்கிற. சும்மா உன்னுடைய மனச போட்டு குழப்பமா உள்ள வா. மகன் கவனமாக திரும்பி வருவான்.” என்று ஆறுதல் படுத்திக்கொண்டு அன்வரும் வேலைக்கு புறப்பட்டுச்சென்றான்.

ஸாறாவும் தனது அன்றாட வேலையெல்லாம் முடித்து விட்டு, மதிய உணவையும் சமைப்பதற்கு ஆயத்தமாகுகிறாள்.
இப்ப தான் எல்லா வேலைகளும் முடிஞ்சிருக்கு. அதுக்குள்ள மதியமும் வந்திட்டு நேரம் எவ்வளவு வேகமாக போகுது எல்லாமே கண்ண மூடி திறக்கிறதுகுள்ள நடக்குது என்று தானாகவே கதைத்துக்கொண்டிருந்தாள். அப்போது தான் திடீரென கணவர் அன்வர் என்றுமில்லாமல் வீட்டுக்கு வந்திருந்தான்.

ஸாறா வியப்பாக அன்வரைப் பார்த்து “என்னங்க வேலைக்கு போகல்லையா..? திடீரென வீட்டுக்கு வந்திருக்கிறீங்.
என்னாச்சி ஏன் முகம் எல்லாம் ஒருமாதியா இருக்கு.” என்று அன்வரை பேச விடாமல் சங்கிலித்தொடர் போல் வினாக்களை அடுக்கிக் கொண்டாள்.

வினாவிற்கு விடை கொடுக்க முடியாமல் ஒரே வார்த்தையில் “பொலிஸிக்கு வரட்டுமாம் நான் போய் வாரன்.
எனக்கும் என்ன விசயம் என்று தெரியாது பார்த்திட்டு வந்து சொல்றன்” என்று அவசரமாக உடையை மாற்றி விட்டு அவசரமாக செல்கிறான் அன்வர்.

இக்குடும்பத்தில் இனி நடப்பது என்ன?

தொடரும்….

றிஹானா றஸீம்
பஹலகம
கெகிறாவ

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed