Main Menu

“காலம் செய்த கோலம்” தொடர் 6 -றிஹானா றஸீம்

இந்த செய்தியைப் பகிர்க >>>

“காலம் செய்த கோலம்” தொடர் 6 -றிஹானா றஸீம்

“அழாதேங்க நாநா
எதுவும் நம்ம கையில இல்ல. அல்லாஹ் எத நாடுறானோ அதான் நடக்கும்.
நீங்க இப்படி அழுதுட்டு தைரியமில்லாம இருந்தா..?
ஸாறா தாத்தாக்கு யாரு ஆறுதல் சொல்ற.
கண்ண துடைங்க முதல்ல” என்று ஆறுதல் கூறினான் சுலைமான்.

ஸாறாவும் தண்ணீரை எடுத்துக் கொண்டு சுலைமானின் கையில் கொடுத்தாள்.

“என்னங்க வந்ததுல இருந்து எதுவுமே பேசாம அப்படியே சிலை மாதிரி இருக்கிறீங்க.
முதல்ல போயிட்டு கை, கால கழுவிட்டு வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.

நீங்களும் சுலைமான் தம்பியும் சாப்பிடுங்க என்று கட்டளை பிறப்பித்தாள்.

அன்வர் அவள் போட்ட கட்டளையைக்கூட விளங்காதவனாய் எதையுமே காதில் வாங்காதது போல் அவ்விடத்திலே நின்று கொண்டிருந்தான்.

ஸாறா அன்வரைப்பார்த்து
” என்னங்க நான் இவ்வளவு நேரம் சொல்லிட்டு இருக்கன் என்னத்யையோ பறி கொடுத்த மாதிரி இருக்கிறீங்க.
வந்ததுல இருந்து ஒரு வார்தை கூட பேசாம இருக்கிறீங்க.
என்னாச்சி உங்களுக்கு” என்று ஓர் அதட்டலாக சத்தம் போட்டாள்.

அன்வர் திடுக்கிட்டவனாக
“என்ன ஸாறா என்ன சரி இப்ப சொன்னீங்களா…?” என்று கேட்க
ஸாறாவுக்கு சற்று கோபம் வந்து விட்டது.

“இவ்வளவு நேரம் நான் கதையா சொல்லிட்டு இருக்கன் திரும்ப திரும்ப கேக்கிருக்கிறீங்க”
முதல்ல சாப்பிடவாங்க என்று எரிச்சலாக கூறிவிட்டுச் சென்றாள்.

சுலைமான் இதொல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவன்
“இங்க பாருங்க அன்வர் நாநா இப்படி இருக்காம முதல்ல சாப்பிடுங்க.
நீங்க சாப்பிட்டாதான் ஸாறா தாத்தாவும் சாப்பிடுவாங்க. சாப்பிட்டதுக்கு அப்பறம் நாங்க ஸாறா தாத்தாகிட்ட பொலிஸ்ல என்ன நடந்தது என்று ஆறுதலா எடுத்து சொல்லலாம்.”

அன்வர் மெளனமாக கேட்டு விட்டு
கை,கால் கழுவுதற்கு வெளியே சென்றான்.

அன்வர் கையில் தண்ணீரை எடுத்துக் கொண்டு.
” என்ட ஸாறாகிட்ட நான் இப்ப சொல்ல போறத எப்படி ஏற்றுக்கொள்வா…?
அவள் இடிஞ்சி பெயிற்றுவா…? ஸாறா என்ன பண்ணுவான்னு ஒன்னும் புரியல்லையே…?
அல்லாஹ் எனக்கு இப்படி ஒரு சோதனைய தந்துட்டியே…?
நான் யாருக்கு என்ன செஞ்சன்” என்று மனதுக்குள்
“தேம்பி தேம்பி” அழத்தொடங்கினான்.

“நடந்தது நடந்து போச்சு ஸாறாக்கு நான் தான் ஆறுதலா இருக்கனும்” என்று தனக்குத் தானே தைரியத்தை வர வைத்தான்.
மனதை சமாதானப்படுத்திக் கொண்டு வீட்டுக்கள் நுழைந்து சாப்பிடுவதற்கு அமர்ந்தான்.

அன்வர் ஸாறாவைப்பார்த்து
“நீங்க எங்களோட இருந்து சாப்பிடுங்”
ஸாறாவும் “சரிங்க ”
என்று சாப்பிட ஆரம்பித்தார்கள். சுலைமானின் கண்ணிலும் அன்வரின் கண்களிலிருந்தும் கண்ணீர் வடியத் தொடங்கியது.

ஸாறா இருவரையும் பார்த்து
“என்ன ரெண்டு பேரும் கண் கலங்கிறீங் நான் சமைத்த கறி கொஞ்சம் காரமாகிட்டு போல, அதனால தான் கண் கலங்கிறீங்க போல” என்று கிண்டலாகச் சிரித்தாள்.

எல்லோரும் சாப்பிட்டு விட்டு இருக்கையில்
ஸாறா, அன்வரைப்பார்த்து
“என்னங்க ஸான் நாளைக்கு வாரண்டு சொன்னான்.
எத்தனை மணிக்கு வாரண்டு உங்களுக்கிட்ட சொன்னானா…?”

அன்வர் திடுக்கிட்டு.
“இல்ல என்கிட எதுவுமே சொல்லல”
“ம் ம்…. சரி விடுங்க புள்ள நேரத்துக்கு வருவான்.” எனக்கூறிக்கொண்டே இருந்தாள்.

இனியும் ஸாறாகிட்ட மறைக்ககூடாது என எண்ணி அன்வர் சுலைமானிடம் சொல்லும் படி கண்ணசைவைக் காட்டினான். சுலைமானும் புரிந்தவனாக சரியென தலையசைத்தான்.

“ஸாறா தாத்தா உங்களுக்கிட்ட கொஞ்சம் பேசலாமா…?”

“என்ன தம்பி இவ்வளவு நேரம் பேசினீங்க.
இப்ப என்ன புதுசா பேசலாமானு கேள்வியெல்லாம் கேகுறீங்க”

சுலைமான் “அது வந்து உங்களுக்கு என்ன சரி வேலையிருக்குமோன்னு தான் கேட் டேன்”

இப்ப ஒரு வேலையும் இல்ல நீங்க பேசுங்க தம்பி.
“அது … இன்றைக்கு நாங்க பொலிஸிக்கு போனது எதுக்கு தெரியுமா…?”
அல்லாஹ்வே,

” நானும் நினைச்சன் இத பத்தி கேக்கனும்டு நீங்களே சொல்றீங்க சொல்லுங்க எதுக்கு போனீங்க”
அது வந்து ஸான் விசயமா தான் போனோம்.

“என்ன தம்பி சொல்றீங்க என்ட மகனுக்கு என்னாச்சு என்று வியப்புடன் கேட்கிறார்கள் தாய் ஸாறா…”
(ஸானுக்கு என்ன நடந்திருக்கும் ஸாறாவின் நிலை என்ன…?)

தொடரும் …

றிஹானா றஸீம்
பஹலகம
கெகிறாவ

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed