Main Menu

thehotline “எதிரொலி”யில் இணைகிறார் சிங்கப்பூரிலிருந்து ஜெரோஷன்

01. உங்களை பற்றியும் உங்கள் அமைப்பை பற்றியும் விரிவாக சொல்லுங்கள் ?
என்னுடைய பெயர் Jacob Luke Jeroshan. நான் இப்பொழுது Degree in Film Direction படிப்பதன் நிமித்தம் Singapore இல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் ஒரு தன்னிச்சையான சினிமா படைப்பாளி.

எமது அமைப்பின் பெயர் ‘Bad-Dot Studios International Independent Film Makers’ இது 2012 இல் ஆரம்பிக்கப்பட்டு, இதுவரையில் 7 குறுந்திரைப்படங்களை படைத்திருக்கின்றோம். எமது தாரக மந்திரமே தரமான படைப்பு என்பது தான்.

02. உங்கள் 7 படைப்புகளையும் பற்றி கூற முடியுமா ?
எமது பாணியில் ஒவ்வொரு படைப்பை பற்றியும் சுருங்க சொல்கிறேன்.

  1. மனிதம் – சிறுவர் துஷ்பிரயோகம்
  2. Chapter 26 – இலஞ்சம்
  3. சிட்சை – பெண்கள் துஷ்பிரயோகமும் அதன் தண்டனையும்
  4. Missing – போரினால் காணாமலாக்கப்பட்டோர்
  5. அஹ்றினை – குரூரமான ஒரு கொடூரனின் கதை
  6. Money Mug – மாயாஜால கோப்பை
  7. Osmodeus – வாழ்க்கை இரண்டாவதாக வாய்ப்புக்கொடுத்த குரூரனின் கதை.இதில் எங்கள் பாடசாலைக்காக ஒரு பாடலும் படைத்துள்ளோம். இவற்றுள் Missing எனும் குறுந்திரைப்படம் மட்டு மண்ணிலிருந்து வெளியான முதலாவது Animation குறுந்திரைப்படம். இது இலங்கையில் தேசிய விருது பெற்றது.

03. இந்த படைப்பு மட்டுமல்லாமல், உங்களது வேறேதும் படைப்புகளுக்கும் விருதுகள் கிடைத்துள்ளதா?
நிச்சயமாக. எமது முதல் குறுந்திரப்படமான மனிதம் 2 உள்நாட்டு விருதுகளும் மூன்றாவது குறுந்திரைப்படமான சிட்சை 3 உள்நாட்டு விருதுகளும் ஒரு சர்வதேச விருதும் எழாவது குறுந்திரைப்படமான Osmodeus 6 சர்வதேச விருதுகளும் பெற்றுள்ளது.

04. Osmodeus ஐ பற்றி சில வார்த்தைகள் ?
எங்களுடன் வெளிநாட்டு படைப்பாளிகளும் சேர்ந்து பணியாற்றிய முதலாவது குறுந்திரைப்படம். அதுமட்டுமல்லாமல், உண்மையான கதை களத்திற்குச் சென்று அங்கு 9 நாட்கள் தங்கி அங்கு வாழ்ந்து அங்கு பழகி எடுக்கப்பட்ட குறுந்திரைப்படம். இது எமக்கு ஒரு புது அனுபவத்தையும் எம்மை உலக தரத்திற்கு கொண்டு சென்ற படம். அதாவது cannes.

05. Cannes பற்றியும் உங்களுடைய அதன் அனுபவங்கள் பற்றியும் கூறுங்கள் ?
முதலாவது எம்மில் பலருக்கு Cannes திரைப்பட விழா பற்றியும் ஒரு திரைப்பட கலைஞனுக்கு அது எவ்வளவு முக்கியத்துவம் என்பது பற்றியும் தெரிவதில்லை. Cannes திரைப்பட விழா என்பது குறும்படப் போட்டிகளின் ஜாம்பவான்.

அங்கு ஒரு படைப்பாளிக்கு இருப்பும் அங்கீகாரமும் கிடைத்தால், உலக சினிமாவில் காலடியெடுத்து வைத்ததற்குச் சமம். அப்படிப்பட்ட cannes திரைகளில் எமது படைப்பான Osmodeus கிழக்கிலிருந்து அங்கு மிளிர்ந்தது எமக்கும் எமது மண்ணுக்கும் பெருமை.

cannes இல் உலகிலிருந்து வந்த பல்லாயிரம் கணக்கான குறுந்திரைப்படங்களுள் தெரிவாகிய நூற்றுக்குட்பட்ட படங்களே திரையிடப்பட்டது. அதில் எமது படமும் ஒன்று. தற்போது cannes ஐ வைத்துக்கொண்டு எமது அடுத்த கட்ட நகர்வு ஆரம்பிக்கப்படவுள்ளது.

எமது நாட்டு படைப்பை உலகத்தரத்திற்கு கொண்டு சென்றமைக்கு நன்றி.

உங்களது எதிர்கால படைப்புகள் நல்லபடி அமைய வாழ்த்துக்கள்.



Comments are Closed