Main Menu

H TV ஏற்பாட்டில் பிரபல அறிவிப்பாளர் ARM.ஜிப்ரியின் புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு

இந்த செய்தியைப் பகிர்க >>>
வாழைச்சேனை முஹம்மது ஹாலித்
மனிதநேய தொலைக்காட்சி அலைவரிசை (HTV) ஏற்பாட்டில் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் மாணவ, மாணவிகளுக்கான முன்னோடிக் கருத்தரங்கு வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 14.07.2018ம் திகதி சனிக்கிழமை பி.ப 02.00 மணி தொடக்கம் 07.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இக்கருத்தரங்கில் அல் பஹ்றியா மகா வித்தியாலய அதிபரும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன அறிவுக்களஞ்சிய நிகழ்ச்சித் தொகுப்பாளருமான பிரபல அறிவிப்பாளர் ARM.ஜிப்ரி, கந்தளாய், அஸ்.ஸபா வித்தியாலய ஆசிரியர் MF.றியாஸ் முகம்மட் ஆகியோரும் வழிகாட்டல்களை வழங்கவுள்ளனர்.
எனவே, இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் அனுமதிக்கட்டணம் 250 ரூபாயினைச் செலுத்தி முற்பதிவுகளை செய்து கொள்ளுங்கள்.
பதிவுகளுக்கு
ஹாலித் 0757954286
றிகாஸ் 0754860701
அனுசரணை:
Humantarian Television Network.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed