மீராவோடை அல் ஹிதாயா பழைய மாணவர் சங்க கட்டார் கிளையின் தலைவராக ஷல்மான் பாரிஸ் தெரிவு : வாழ்த்துத்தெரிவிப்பு

மட்டக்களப்பு மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய கட்டார் கிளை பழைய மாணவர் சங்கத்தின் புதிய தலைவராக சல்மான் பாரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று 08.01.2019ம் திகதி வெள்ளிக்கிழமை கட்டாரில் இடம்பெற்ற பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டத்தின் போது ஏகமனதாகத்தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த காலத்தில் பாடசாலை அபிவிருத்திக்காக பல்வேறு உதவிகளை வழங்கி வருவதுடன் மறைமுகமாக பல பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக பெறுமதிமிக்க உதவிகளை வழங்கி வருகின்றார்.
மேலும் பிரதேச இளைஞர்களுடன் நட்புறவான உறவினைக்கொண்டுள்ள இவர் கட்டார் பழைய மாணவ சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டமை குறித்து பிரதேச இளைஞர்களும் மீராவோடை வர்த்தக சங்கத்தின் தலைவர் வீ.ரீ. மஜீத், மீராவோடை யூத் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஐ.எல்.பதுர்தீன் சமூக நலன் விரும்பிகளும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.