Main Menu

தீர்வுகள் எப்போது ?

thehotline செய்திக்குப்பலன் : நடவடிக்கை மேற்கொண்ட தவிசாளருக்கு நன்றி

கொழும்பு - மட்டக்களப்பு வீதியில் ஓட்டமாவடி பஸாரில் பிரதான பகுதியில் அமைந்துள்ள பொது மலசலகூடம் கவனிப்பாரற்று அசிங்கப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும், அதனைச்சுத்தம் செய்து மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.ஹாமித் மெளலவியின் கோரிக்கை தொடர்பான செய்தியொன்றை "ஓட்டமாவடி பொது மலசலகூடத்தின் அவல நிலை : கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள பிரதியமைச்சரின் பெயருக்காவது தவிசாளர் மதிப்பளிக்க வேண்டும்-எம்.ஐ.ஹாமித் மெளலவி" -(www.thehotline.lk/archives/14362) எனும் தலைப்பில் கடந்த

குறித்த கோரிக்கை அடங்கிய செய்தி தொடர்பில் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அதனை சுத்தப்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கிய ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ,அஸ்மி அவர்களுக்கு பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.ஹாமித் மெளலவி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்.

அத்துடன், எமது Thehotline மூலம் முன்வைக்கப்படும் இவ்வாறான மக்களின் பிரச்சினைகளுக்கு நடவடிக்கை மேற்கொண்டு தீர்வினைப் பெற்றுக்கொடுத்த தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி அவர்களுக்கு எமது இணையதளம் சார்பாகவும் மனப்பூர்வமான நன்றிகளும் பாராட்டுக்களும்.