மர்ஹூம் முஹம்மதுத்தம்பி கல்குடாவின் ஆளுமை

கொழும்பு ஸாஹீராக் கல்லூரியின் பழைய மாணவரான இவரின் தலைமையில் சமகாலத்தில் மல்யுத்தம் மற்றும் றகர் விளையாட்டுப்போட்டிகளில் பல தேசிய சாதனைகளை நிலைநாட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. .
கல்குடாவின் முதலாவது பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராகவும், கராத்தே, மல்யுத்த விளையாட்டுத்துறையில் முதன்மையாளராகவும், அதன் பயிற்றுனராகவும் திகழ்ந்தார். இவரது தலைமையில் வாழைச்சேனை அப்துல்லாஹ் ஹாஜி, மீரா முகைதீன் JP, MS.மீராசாஹிப் பரிகாரியார் அடங்கிய குழுவினர் கல்லடி சாட்டோ சங்கரதாஸ் அணியுடன் மோதி வெற்றியடைந்தனர்.
வாழைச்சேனையைச்சேர்ந்த சீனிமுகம்மது விதானையார், றஹ்மத்தும்மாவின் மூத்த மகனாகப் பிறந்த இவருக்கு சட்டத்தரனி நவாஸ், சேஹு அலி மெக்கானிக் ஆகியோர் சகோதரர்களாவர்.
அத்துடன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாஹி சாலி, பிர்தொஸ் அதிபர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் புர்க்கான் ஆகியோரின் மாமாவும் மர்ஹும் லெப்பைத்தம்பியின் (கிராம சேவை உத்தியோகத்தர்) மைத்துனருமாவார். மீராவோடையில் பிரபலமான குடும்பத்தில் திருமணம் முடித்த இவருக்கு 2 பிள்ளைகள்.
கிழக்கு மாகாணத்தின் முதலாவது பொலீஸ் பரிசோதகராகத் (SI) தெரிவான முஹம்மதுத்தம்பி, 1970 ஆண்டு ஜே,வி,பி (J V P) கலவரம் காலத்தில் கேகல்ல பிந்தெனிய பொலீஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக இருந்து அப்பிரதேசத்தில் ஜே,வி,பியினரை (JVP) அடக்குவதில் மும்முரமாகச் செயற்பட்டார். இதன் காரணமாக இவரைக்கொலை செய்யும் முயற்சிகளிலும் இறங்கி இருந்தனர்.
அத்தோடு, பொலிஸ் மல்யுத்த அணி, றஹர் அணியினது தலைமைப் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. D I G கபூர் அவர்களும் S I முஹம்மதுத்தம்பியும் சமகாலத்தில் பொலிஸில் இணைந்தவர்கள் என்பதுடன், SSP மஜீத் இவரின் பள்ளித்தோழர் எனவும் சொல்லப்படுகின்றது.
களுவாஞ்சிக்குடி பொலீஸ் நிலையப்பொறுப்பதிகாரியாக பல சவால்களுக்கு முகங்கொடுத்து பல்வேறுபட்ட சமூகச்சீர்கேடுகளை இல்லாதொழிப்பதில் மும்முரமாக செயற்பட்ட இவரை பொறுத்துக்கொள்ள முடியாத தமிழ்த்தரப்பினர் வலிந்திழுத்து குற்றஞ்சாட்டி இடைநிறுத்தம் செய்தனர்.
அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்று வெற்றி பெற்ற அவர், மீண்டும் அதே பொலிஸ் நிலையத்திற்கு தன்னை நியமிக்குமாறு அவரால் விடுக்கப்பட்ட கோரிக்கை அரசாங்கம் மறுத்த போது பதவியைத்துறந்தார்.
அது மட்டுமன்றி, பொலிஸ், விளையாட்டுத்துறை, கல்வி என தனது திறமைகளால் முன்னணி வகித்த முஹம்மதுத்தம்பி கல்குடா அரசியலில் காற்பதித்தார். கல்குடாவின் அரசியலில் தடம்பதித்து சாதனை புரிந்த பிரதியமைச்சர் மர்ஹும் முகைதீன் அப்துல் காதரை எதிர்த்து கடந்த 1994 ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் கல்குடத்தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டார்,
அதன் பின்னர் வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையின் நிறைவேற்றுப்பணிப்பாளராக இருந்த தம்மாலான பணிகளை முன்னெடுத்ததுடன், புலிகளின் அச்சுறுத்தல் தமிழ் தரப்பினரின் அழுத்தங்களுக்கு மத்தியில் கடதாசி ஆலை வளாகத்தில் பள்ளிவாயல் அமைப்பதற்கான காணியினை வழங்கினார், இது பல்வேறு அதிர்வுகளையும், முறுகலையும் தோற்றுவித்திருந்தது.
வல்ல இறைவன் அவரைப் பொருந்திக்கொள்வானாக.