Main Menu

விற்பனைக்கு

13 ஆண்டுகளாக அரசியல்வாதிகளின் பிடிக்குள் சிக்கியுள்ள பள்ளிவாயலை மீட்க திரண்ட மக்கள் -வீடியோ இணைப்பு

அபூ அஷாத் ஜமாஅத்தார், ஊர் மக்களின் விருப்பத்திற்கு மாறாக, அரசியல்வாதிகள் மற்றும் வக்ப் சபையின் சில அங்கத்தவர்களின் உதவியுடன் கடந்த 13 ஆண்டுகளாக நிர்வகிக்கும் போர்வை முஹைதீன் பள்ளிவாயல் நிர்வாக சபைக்கெதிராக நேற்றிரவு (2019.03.10) இஷாத்தொழுகைக்குப் பின்னர் பிரதேச இளைஞர்களும், பொது மக்களும் பள்ளிவாயல் முன்றலில் ஒன்று திரண்டனர்.

வக்பு சபை வேற்புமனு இலக்கம் WB/6915/201 5 படி போர்வை பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாக சபையொன்றை தேர்தல் மூலம் தெரிவு செய்யுமாறு கடந்த 2019.02.11ம் திகதி கடிதம் மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், குறித்த கடிதத்தை மறைத்து விட்டு, கடந்த 2019.02.21ம் திகதி போர்வை பள்ளிவாயல் நிர்வாக சபையினால் ஆலோசனைக்கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அன்று இடம்பெற்ற கூட்டத்தின் படி 2019.03.10ம் திகதி புதிய நிர்வாக சபைத்தெரிவு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. என்றாலும் திடீரென கடந்த 2019.03.09ம் திகதி மேலுமொரு அறிவித்தல் மூலம் குறித்த கூட்டம் தற்காலிகமாக பிற்போடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கிளர்ச்சியடைந்த ஊர் மக்கள் நேற்றிரவு 2019.03.10ம் திகதி இஷாத்தொழுகைக்குப் பின்னர் வக்பு சபைக்கு கையளிப்பதற்கான மகஜரில் கையொப்பமிடும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

குறித்த மகஜரில் தற்போதுள்ள நிர்வாகத்திற்கெதிராக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், ஊர் மக்களின் விருப்பத்திற்கு மாற்றமாக தான்தோன்றித்தனமாக நிர்வாகம் செயற்படுகின்றமை, நிர்வாக உறுப்பினர், ஊர் மக்களின் ஆலோசனைகளின்றி மூன்றே மூன்று நபர்கள் மாத்திரம் ஒன்றிணைந்து தீர்மானம் மேற்கொள்கின்றமை, நிதியறிக்கைகளை வெளியிடப்படாமை, ஊர் மக்களின் ஆலோசனைகளின்றி கட்டடங்கள் நிர்மாநிதமை போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி குற்றச்சாட்டுக்கள் அடங்கிய மகஜரை நேரடியாக வக்ப் சபையில் கையளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஊர் மக்கள், இளைஞர்கள் ஒன்றுகூடிய செய்தியறிந்த பள்ளிவாயல் நிர்வாக சபையினர் தலைமறைவாகியமை குறிப்பிடத்தக்கது.

பள்ளிவாயல் நிர்வாக சபையின் தான்தோன்றித்தனம் பற்றி நிர்வாக சபை உறுப்பினர் ஒருவரால் வக்ப் சபைக்கு முன்வைக்கப்பட்ட கடிதம்.

வக்ப் சபையினால் அனுப்பிய கடிதம் வக்ப் சபைக்கு கையளிக்கவுள்ள மகஜர்